இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வழங்கினார்

திருவள்ளூர்,ஏப்.27: இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்றார். திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமய நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் விழா, ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  மாவட்ட தலைவர் ஏ.எஸ்.யாசின் மௌலானா தலைமை வகித்தார். மாவட்ட செயளாலர் ஏ.ஆர்.எம்.ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு, இப்தார் நோன்பை திறந்து வைத்து, ஏழை எளிய முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், ஜமாத்துல் உலமா, மாவட்ட செயலாளர் எஸ்.உமர்பாரூக் அன்வாரி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சல்மான் முகம்மது, தேசிய இணைச் செயலாளர் புளியங்குடி எம்.அல்அமீன், விசிக மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்த்தன், திமுக நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், நகர மன்றத் தலைவர் பா.உதயமலர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்

ஆவடி அடுத்த திருநின்றவூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுகாதாரத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று தொடங்கி வைத்து பேசுகையில், இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுடையது. திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் பல்லாயிரம் பேர் இதனால் பயனடைவார்கள் என்றார். பின்னர் எம்பி ஜெயக்குமார், கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 5ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கப்படும் என்றனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தொழுவூர் நரேஷ், திருநின்றவூர் நகர செயலாளர் திவை ரவி, நகரமன்ற தலைவர் உஷாராணி, மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நடுகுத்தகை ராஜு, ஜெயபால், கந்தன்பாபு, ஆவடி மேயர் உதயகுமார், சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர், டாக்டர் பிரதீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: