×

திருவான்மியூர் கலாஷேத்ராவில் கைவினை பொருட்கள் கண்காட்சி: மே 1ம் தேதிவரை நடைபெறுகிறது

சென்னை,  ஏப்.27: இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி, ‘இந்தியன் ஆர்ட்டிஷன் பஜார்’ என்ற பெயிரில் திருவான்மியூரில்  உள்ள கலாஷேத்ரா வளாகத்தில் நடைபெறுகிறது. மே 1ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் காஷ்மீர் முதல்  கன்னியாகுமரி வரையிலுள்ள கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் ஆகியோரின்  தயாரிப்புகள் இடைதரகர்கள் தவிர்த்து நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை  செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு துஷார் சில்க், மெல்லிய  பருத்தி ஆடை (க்ரீப்), ஜார்ஜெட் சில்க், சேலை ரகங்கள், ஆரணி சில்க் சாரீஸ்,  தர்மாவரம், காஞ்சிபுரம் மற்றும் திருமண பட்டு, ரா சில்க் மற்றும் கோஷா  சில்க், பலுசாரி சில்க், மத்கா  சில்க், பிரிண்டட் சில்க், டிசைனர் உடைகள் மற்றும் பிளாக் பிரிண்டட்  சேலைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதுதவிர  குர்தா, ஷால், ஸ்டோல்ஸ், சல்வார் கமீஸ், குஷன் கவர்ஸ், பெட் ஷீட்ஸ்,  டிசைனர் குர்தீஷ், கலாம்கரீஸ் குர்தீஷ், குஜராத் குர்தீஷ், ராஜஸ்தான், குஜராத்தி பெட்ஷீட், கன்னூரி  காட்டன்ஸ், ராஜஸ்தானி, அசாம் கைவினை பொருட்கள், டிசைனர்  நகைகள், பெயின்டிங்ஸ் உட்பட அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Handicrafts Exhibition ,Thiruvanmiyur Kalashetra ,
× RELATED கைவினைப்பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா