மாவட்ட கபடி போட்டி வடக்குநல்லூர் அணிக்கு முதல் பரிசு

சாத்தான்குளம், ஏப். 26: சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்கிணறு கிராமத்தில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி, 2 நாட்கள் நடந்தது. இதில் தூத்துக்குடி, புதுக்கிணறு, பன்னம்பாறை, வடக்குநல்லூர், கீழநாலுமுலைக்கிணறு, காயல்பட்டினம், சாத்தான்குளம், நாலுமாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங். தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ  துவக்கி வைத்தார். இறுதிப்போட்டியில் தூத்துக்குடி பிஎஸ்சி அணியும், வடக்குநல்லூர் ஜோயல் பிரதர் அணியும் மோதின. இதில் வடக்குநல்லூர் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ சார்பில் வடக்குநல்லூர் அணிக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், சாத்தான்குளம் வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் பன்னம்பாறை பஞ். தலைவர் அழகேசன், வைகுண்டம் தொகுதி இளைஞர் காங். தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், பஞ். முன்னாள் தலைவர் ராதிகா பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: