கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக கடம்பூர் ராஜூ எம்எல்ஏ மீண்டும் தேர்வு

கோவில்பட்டி, ஏப். 26: அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. கிளை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் தேர்தல் 2 கட்டமாக ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. 3ம் கட்டமாக மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல், கோவில்பட்டி வேலன் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பதவிக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏ விருப்பமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதேபோல் அவைத்தலைவர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கும் நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்தனர். தேர்தல் பொறுப்பாளர்களாக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ், வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் மதுரை வீரன் ஆகியோர் செயல்பட்டனர்.

மாவட்ட செயலாளர் பதவிக்கு கடம்பூர் ராஜூ எம்எல்ஏவை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர், போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் விஜய பாண்டியன், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் சீனிராஜ், முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, கருப்பசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய  முன்னாள் செயலாளர் போடுசாமி, பேச்சாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், வழக்கறிஞரணி செயலாளர்  சிவபெருமாள், மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மகளிரணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, விவசாய அணி அமைப்பாளர் சோலைச்சாமி, வழக்கறிஞர் சங்கர் கணேஷ், கிளை செயலாளர் மணிராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், ஆபிரகாம் அய்யாத்துரை, அம்பிகாவேலுமணி, பீக்கிலிப்பட்டி மணிராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: