×

தச்சை கணேசராஜா மாவட்டச் செயலாளராக மீண்டும் தேர்வாகிறார் நெல்லையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்

கேடிசி நகர், ஏப். 26: அதிமுக உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்து வருகிறது. கிளை செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், பேரூர், நகர செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தல் ஆகியவை 2 கட்டமாக ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் கட்டமாக மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் தச்சநல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பதவிக்கு தச்சை கணேசராஜா விருப்ப மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதேபோல் மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு ஞானப்புனிதா, துணைச் செயலாளர்கள் கவிதா பாலசுப்பிரமணியன், பாலமுருகன், மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு பரணிசங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் பதவிக்கு முன்னாள் எம்பி சவுந்தராஜன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அவர்களை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

தேர்தல் அதிகாரிகள் வடசென்னை வடமேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு, வக்கீல் அணி துணைச் செயலாளர் நாராயணராவ் ஆகியோர் தேர்தலை நடத்தினர். எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்ட் ஆகியோரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு கடும் போட்டிa நிலவுகிறது. முன்னாள் எம்எல்ஏ ஆர்.பி.ஆதித்தன், செவல் முத்துசாமி, பார்வதிபாக்கியம், உவரி பவர்சிங், செழியன் உள்ளிட்டோர் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். தேர்வு செய்யப்படும் புதிய நிர்வாகிகள் தொடர்பான அறிவிப்பு தலைமையில் இருந்து வெளியிடப்படும்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன் என்ற கணேசன், பகுதிச் செயலாளர்கள் நெல்லை கிழக்கு காந்தி வெங்கடாச்சலம், ஜெனி, திருத்து சின்னதுரை, ஹயாத், சிந்துமுருகன், மேகை சக்திகுமார், கவுன்சிலர் சந்திரசேகர், ஒன்றியச் செயலாளர்கள் மானூர் லட்சுமணன், கங்கைமுருகன், முத்துக்குட்டிபாண்டியன், விஜயகுமார், கேபிகே.செல்வராஜ், அந்தோணிஅமல்ராஜ், நெல்லை பகுதி ெஜ. பேரவை செயலாளர் சீனி முகமதுசேட் மற்றும் பிச்சைராஜ், ஹரிஹரசுதன், மூளிகுளம் முத்துராமன், டாஸ்மாக் ஆனந்த், வண்ணை கணேசன், வேல்முருகன், நெல்லை பகுதி அவைத்தலைவர் நயினாமுத்துராஜ், நல்லபெருமாள், கண்டியபேரி முத்து, பாளை பகுதி பொருளாளர் பூக்கடை சப்பாணிமுத்து, கேடிசி சின்னபாண்டி, நாராணம்மாள்புரம் பேரூர் துணைச் செயலாளர் முருகன், ெநடுஞ்செழியன், மாரிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Tachai Ganesaraja ,District Secretary ,AIADMK ,District Administrators Election ,Nellai ,
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...