கலெக்டர் துவக்கி வைத்தார் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அலுவலகங்கள் முன் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஏப்.26: நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி குறைத்துள்ளதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி குறைத்துள்ளதை கண்டித்தும், குறைக்கப்பட்டுள்ள நிதியினை கூடுதலாக வழங்கக்கோரியும் மற்றும் இந்த வேலைத்திட்டத்தில் வேலை நேரம் காலை 7 மணி எனபதை காலை 9 மணியாக மாற்றி அமைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினக்கூலி ரூ.600 வழங்கிட வேண்டும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு உரிய நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்த கூடாது, விவசாயத்திற்கு பயன்படும் குளம், வாய்க்கால், ஏரிகள் தூர் வாரும் பணிக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் தலைமையில் ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் மற்றும் கட்சியின் ஒன்றிய செயலாளர் புலிகேசி, நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையிலும், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் தலைமையிலும், இதேபோல் குடவாசல் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து வரும் மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்பட 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிப்பீட்டு முகாம் நடைபெறும் இடங்கள் இந்த முகாம் இன்று (26ந் தேதி) கொரடாச்சேரி ஒன்றியத்திலும், நாளைம் (27ந் தேதி) வலங்கைமான் ஒன்றியத்திலும், வருகிற 28ந் தேதி மன்னார்குடி ஒன்றியத்திலும், 29ந் தேதி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலும், 30ந் தேதி நன்னிலம் ஒன்றியத்திலும், அடுத்து மாதம் 2ந் தேதி நீடாமங்கலம் ஒன்றியத்திலும், 4 ந் தேதி குடவாசல் ஒன்றியத்திலும், 5ந் தேதி கோட்டூர் ஒன்றியத்திலும், 6ந் தேதி முத்துப்பேட்டை ஒன்றியத்திலும் நடைபெறவுள்ளது. எடுத்துவரவேண்டிய ஆவணங்கள் இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கு வரும் மாற்றுத்தினாளிகள் தங்களது ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை நகல், தலைமையாசிரியர் சான்று (படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்) ஆகியவற்றை மறக்காமல் எடுத்து வர வேண்டும்.

Related Stories: