கந்தர்வகோட்டை பகுதிகளில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி

கந்தர்வகோட்டை, ஏப்.25: கந்தர்வகோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 5 கிலோ ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. 5 கிலோ சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தரைப்பூண்டு 2 கிலோ 100 ரூபாய்க்கு என வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்று கறி வடகம் போட தயாராகி வருகிறார்கள். ஒரு நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு ஆட்டம் காட்டிய சின்ன வெங்காயம் விலை திடீர் என விலை குறைந்துள்ளது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கந்தர்வகோட்டை பகுதிகளில் கிராமங்கள்தோறும் அனைத்து தெருக்களிலும் வியாபாரிகள் நேரடியாக வாகனங்களில் கொண்டு சென்று சின்னவெங்காயம், தரைபூண்டுகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

Related Stories: