பெரம்பலூர் அருகே பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவி படுகாயம்

பெரம்பலூர்,ஏப்.26: பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் விஜயலட்சுமி (16). இவர், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி விஜயலட்சுமி பாடாலூரிலிருந்து துறையூர் செல்லும் அரசு பஸ்சில் ஏறி கூட்ட நெறிசலால் முன்பக்க படியில் சில மாணவிகளோடு சேர்ந்து தொங்கிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை 9.45மணிக்கு நக்கசேலம் பள்ளிக்கு அருகே பஸ் சென்றபோது, கை நழுவி தவறுதலாக கீழே விழுந்ததார். இதில், விஜயலட்சுமியின் வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்டது. அவரை பள்ளி மாணவர்கள், பஸ் பயணிகள் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாடாலூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தகவலறிந்து பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமாருடன் அரசு மருத்துவ மனைக்கு நேரில் சென்று காயமடைந்த மாணவியை பார்வையிட்டு மருத்துவர்களிடம் மாணவிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

Related Stories: