ஜெயங்கொண்டம் அருகே தமிழ் மக்கள் பண்பாட்டு கலை விழா

ஜெயங்கொண்டம், ஏப்.25: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் தமிழர் நீதி கட்சி சார்பாக தமிழ் மக்கள் பண்பாட்டு கலைவிழா நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழர் நீதி கட்சி நிறுவன தலைவர் ஏர் உழவர் சங்க நிறுவனருமான சுபா.இளவரசன் தலைமை வகித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் விழாவை துவக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பாடகர்கள் அறிவுமழை, சண்முகம் புரட்சிகர பாடல்களை பாடி அசத்தினர். முன்னதாக தமிழ் கலாச்சாரம், தமிழர் பாரம்பரியம், தமிழர் பண்பாடு, பரத நாட்டியம், செண்டை மேள தப்பாட்ட கலை நிகழ்ச்சியும் கலைகள் பற்றிய விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு ராஜேந்திர சோழன், தமிழரசன், நம்மாழ்வார், கண்ணகி, வேலுநாச்சியார், வள்ளலார் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தலைமை நிலைய செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Related Stories: