காரைக்கால் அருகே ரூ.4.32 கோடியில் தடுப்பணை சீரமைப்பு பணி பூமி பூஜை

காரைக்கால்,ஏப்.26: காரைக்கால் அருகே தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியுடன் தடுப்பணை சீரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் அகலங்கன்னு கிராமத்தில் அரசலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை யில், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நிதி உதவி திட்டத்தின் பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 32 லட்சம் மதிப்பில் குறுக்கு சுவருடன் கூடிய கான்கிரீட் தரை தளம், கான்கிரீட் தடுப்பு கட்டைகள் அமைத்தல், அகளங்கன் கிராமத்திலிருந்து செட்டிக்கோட்டம் சிற்றேரி வரையிலான இணைப்பு சாலையினை மேம்படுத்துதல், சாலையோரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் திருநள்ளாறு எம்எல்ஏ சிவா, கலெக்டர் அர்ஜுன் சர்மா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வீரசெல்வம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன், நீர்ப்பாசனம் உபகோட்ட உதவி பொறியாளர் மகேஷ், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: