ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கண்டித்து கரூரில் தொழிற்சங்க மய்ய கவுன்சில் ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப். 26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்க மய்யக் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு நிர்வாகி சக்திவேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சரவணன், ராஜன், பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். ராஜா நன்றி கூறினார். அரசியல் அமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள கூட்டாட்சி முறைக்கு எதிரான, ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு, தொழிலாளர் விரோத 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சட்டத் தொகுப்புகள் முழுவதும் தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கும் போது, மாநில விதிகளை உருவாக்குவதை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும். ஒன்றிய, மாநில ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள தொழிலாளர் விவாகரங்கள் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: