குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு

நாகர்கோவில், ஏப். 26: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்று காலை வரை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 19 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.15 அடியாக இருந்தது. அணைக்கு 304 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 38.65 அடியாக இருந்தது. அணைக்கு 238 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 9.45 அடியாகவும், சிற்றார்-2ல் 9.54 அடியாகவும் நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கை அணையின் நீர்மட்டம் 19 அடியாகும். மாம்பழத்துறையாறு அணையில் 10.01 அடியும், முக்கடலில் 9.20 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலைவரை பூதப்பாண்டியில் 11.2, கன்னிமார் 16.2, மயிலாடி 10.2, நாகர்கோவில் 14, பேச்சிப்பாறை 8.8, புத்தன் அணை 8, தக்கலை 17.2, இரணியல் 6.4, மாம்பழத்துறையாறு 19, கோழிப்போர்விளை 6, முக்கடல் அணை 18.9 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.

Related Stories: