×

கறிக்கோழி பண்ணை சங்கத்தினர் மனு

விருதுநகர், ஏப்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த கறிக்கோழிப்பண்ணை விவசாயிகள் நல சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், விவசாய நிலங்களில் உப தொழிலாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த இரு ஆண்டுகளாக இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பண்ணை வேலையாட்கள் கூலியும் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச வளர்ப்பு தொகை மற்றும் தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் கோழிவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படவில்லை. தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து ஏப்.29 முதல் வேலை நிறுத்தத்தில் கறிக்கோழி பண்ணையாளர்கள் ஈடுபட இருப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் அராஜக போக்கில் இருந்து விவசாயிகளை காக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

Tags : Poultry Farm Association ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு