பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி

பெரியகுளம், ஏப். 26: பெரியகுளம் அருகே உள்ள வடபுதுப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (33), கடந்த 2015ல் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரின் மீது, திருப்பூரிலிருந்து தேனி சென்ற அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து விபத்தில் பலியான ராஜ்குமாரின் மனைவி மாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர், இழப்பீடு வழங்கக்கோரி கோவை மண்டல அரசு பேருந்து கழகம் மீது, பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக 2016ல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘ரூ.23,55,787 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 6 ஆண்டுகள் ஆகியும், கோவை மண்டல அரசு பேருந்து கழகம் இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதையடுத்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் உத்தரவின்பேரில், ‘அமீனா ரமேஷ் மற்றும் வழக்கறிஞர் பரமேஸ்வரன் ஆகியோர் கோவையில் இருந்து தேனி சென்ற கோவை மண்டல அரசு பேருந்தை பெரியகுளத்தில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

Related Stories: