கல்லூரியில் உலக பூமி தினம்

காரைக்குடி, ஏப்.26: காரைக்குடி அருகே பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கலைக்கல்லூரியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு என்எஸ்எஸ் மற்றும் விலங்கியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி தாளாளர் அண்ணாமலை பேரணியை துவக்கி வைத்தார். முதல்வர் ராமுத்தாய் முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் அதிகாரி மற்றும் விலங்கியல் துறை தலைவர் கேப்டன் ஆனந்தசெல்வி பேரணி ஏற்பாடுகளை செய்திருந்தார். சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம், பூமி மாசுபடுவதை குறைக்க எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும், புவி வெப்பம் அடைவதை தடுக்க மரங்களின் பங்கு குறித்து விளக்கப்பட்டது. பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள்,பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் கலந்து கொண்டனர். எஸ்.ஐ பாண்டி, சிறப்பு எஸ்.ஐ தர்மராஜ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: