பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு

திருப்புத்தூர், ஏப்.26: திருப்புத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் நேற்று உலக மலேரியா தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புத்தூர் ஆர்.சி.பாத்திமா அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று உலக மலேரியா தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், மலேரியா பரவும் விதம், மலேரியா பரிசோதனை, மலேரியா தடுப்பு மருந்து மற்றும் மலேரியா வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி மாவட்ட பூச்சியில் வல்லுநர் ரமேஷ் விளக்கி கூறினார். மேலும் மாணவ, மாணவிகள் மலேரியா வராமல் தடுப்பது குறித்து உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் சகாய ஜெரால்ட்ராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: