மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கமுதி, ஏப்.26: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென அரசுகளுக்கு கோரிக்கை வைத்து முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மூக்கூரான் தலைமையில், செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையிலேயே எந்த ஒரு சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: