மாநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு செல்லூர் ராஜூ விருப்ப மனு

மதுரை, ஏப்.26: அதிமுகவில் 3வது கட்ட அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக கட்சியின் மகளிரணி செயலாளர் வளர்மதி தலைமையில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கந்தன் மற்றும் பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவின் விருப்ப மனுவை, அவர் சார்பில், மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கணேஷ்பிரபு மற்றும் அதிமுக நிர்வாகிகள் சேர்ந்து தேர்தல் பொறுப்பாளர் வளர்மதியிடம் தாக்கல் செய்தனர். இதில், நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாத்துரை, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடப்பதால், செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ அதில் கலந்து கொண்டுள்ளார். இதனால், அவர் சார்பில் கட்சி நிர்வாகிகள் மனு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: