×

கோத்தகிரி குண்டாடா நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

ஊட்டி,ஏப்.26:  நீலகிரி மாவட்டத் திட்ட அலுவலரும் முதன்மை கல்வி அலுவலருமான நாசருதீன் ஆணைப்படியும், திட்ட உதவி அலுவலர் குமார் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மா வழிகாட்டுதல் படி கோத்தகிரி அருகே குண்டாடா ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளியில் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் அரகம்பை கிருஷ்ணன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், கவுன்சிலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் பேசுகையில், பெற்றோர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், சமுதாய பங்கேற்புடன் அமைக்கப்படும் இந்த அமைப்பு மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் நீக்குதல், நிதி ஆதாரம், பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பள்ளியின் முழு வளர்ச்சிக்கு உதவக்கூடிய உயிரோட்டமான அமைப்பாக இருக்கும் என்றார்.
 41 பெற்றோர்கள், ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மறு கூட்டமைப்பிற்கு பின்னர் பள்ளியின் புதிய மேலாண்மைக் குழு தலைவியாக யாஜி அம்மு தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக சரோஜா உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் ஆசிரியர் பிரதிநிதி மல்லிகா குமார், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் திருச்செல்வி, கல்வியாளர் தன்னார்வலர் சுமித்ரா மற்றும் இதர உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற்றோர்கள் 14 பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கி பதிவு செய்தார். மேலும் தேர்வு பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் 20 பேர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  இறுதியில் ஊர்த் தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

Tags : Committee ,Kotagiri Gundada ,Middle ,School ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...