சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ேம தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி மதுக்கடைகள் மூடல்

ஊட்டி,ஏப்.26: நீலகிரி மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வரும் 1ம் ேததி மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான (சில்லறை விற்பனை) விதிகள் 1989 ஆகியவற்றின் படி எப்எல்1., டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள்,எப்எல்2., கிளப்கள்,எப்எல்3., 3ஏ., ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது. 1ம் தேதியன்று அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள யூனிட் 1,2 பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரியும் பட்சத்தில் அவ்விவரத்தை குன்னூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423-2234211, கூடுதல் எஸ்பி., 0423-2223802, ஆயம் உதவி ஆணையர் 2443693 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Related Stories: