மேயர் கல்பனா துவக்கி வைத்தார் மோடி படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை கோரி கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை; 140 பேர் கைது

கோவை, ஏப். 26:  கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி உருவப்படத்தை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை திரும்ப வைக்கவும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் மோடி படம் வைப்பதற்கான தடையை அகற்றக் கோரியும் பாஜ தெற்கு மாவட்ட நிர்வாகிகள், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் நேற்று மனு அளிக்க வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில். ‘‘வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி படத்தை மாட்ட அனுமதி அளிக்க வேண்டும்’’ என தெரிவித்து இருந்தனர். முன்னதாக 100க்கும் மேற்பட்டோர் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். இதையடுத்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இந்த முற்றுகை போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: