கோவையில் தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவின் இசை விழா

கோவை, ஏப்.26:  கோவையில் 96 திரைப்பட புகழ் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ குழுவினர் நடத்தும் பிரம்மாண்ட இசை திருவிழா வரும் 30-ம் தேதி நடக்கிறது. இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்‌ஷ்மிகாந்த். இணை நிறுவனர் மது ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் வீட்டிலேயே மக்கள் முடங்கிக்கிடந்த நிலையில் வெளியில் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கோவையில் இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் ரஷ் ரிபப்ளிக் ஈவென்ட் சார்பில் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.

கோவையில் ரஷ் ரிபப்ளிக் நிறுவனம் நடத்தும் முதல் மற்றும் மிகப்பெரிய இசைக் கச்சேரி இதுவாகும். சுமார் மூன்று மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சியில், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தாய்க்குடம் பிரிட்ஜ் அமைப்பினர் இசைக்கச்சேரி நடத்துகின்றனர். இந்த தாய்க்குடம் பிரிட்ஜ் அமைப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் கச்சேரி நடத்தியுள்ளனர். 96 திரைப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா குழுவினர்தான் இந்த கச்சேரியை நடத்துகின்றனர். ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா ஆகியோரின் பாடல்களும் இடம் பெறவுள்ளது. இது இசையை விரும்பும் மக்களுக்கான இசை விருந்தாக இருக்கும். இந்த இசை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வரும் 30-ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடக்கிறது. டிக்கெட் விலை ரூ.500 முதல் ஆரம்பமாகிறது. ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: