சிவகாசி மெப்கோ கல்லூரி ஆண்டு விழா

சிவகாசி, ஏப்.25: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லூரியின் 38வது ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் டென்சிங் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் அபிரூபன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கம் தலைவர் லஷ்மி பிரியா ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், கல்லூரி சமூக பொறுப்புமிக்க அனைத்து துறைசார் பணிகளுக்கும் மாணவர்களை வெற்றிகரமாக அனுப்பி வருகிறது. தானும் அந்த வரிசையில் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன், என்றார். மாணவர்கள் மற்றும் சாதனை ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: