மிஸ்டர் விருதுநகர் பட்டம்

சிவகாசி, ஏப். 25: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட பாடிபில்டர் நலச்சங்கம், பிரண்ட்ஸ் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான பாடிபில்டர்ஸ் போட்டி ‘கிளாசிக் 2022’ என்ற தலைப்பில் நடந்தது. பல்வேறு நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தனித்தனி எடை பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் சிவகாசி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரி மாணவர் ஜெய கணேசன் 60-65 கிலோ எடை பிரிவில் முதல்பரிசு பெற்று மிஸ்டர் விருதுநகர் பட்டத்தை வாங்கினார். இவரை கல்லுாரி தாளாளர் சோலைசாமி, இயக்குநர் விக்னேஸ்வரி, முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, உடற்கல்வி துறை பேராசிரியர் பிரகாஷ், பேராசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: