×

பொட்டிபுரம் கிராமசபை கூட்டத்தில் புதிய குளம் தோண்ட பூமிபூஜை

சின்னமனூர், ஏப். 25: சின்னமனூர் அருகே, பொட்டிப்புரம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ‘கிராமத்தில் புதிய குளம் தோண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழக அரசு கிராமங்கள் தோறும் மழைநீரை சேகரிக்க, ஒரு ஏக்கரில் குளம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, ஊரின் மேற்குப் பகுதியிய்ல் கருவேல மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஒரு ஏக்கரில் குளம் தோண்ட பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயமாலா மற்றும் நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள அமிர்தம் திட்டத்தின் கீழ், புதிய குளம் அமைக்க, பூமிபூஜை போட்ட சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள பொட்டிப்புரம் கிராமம், தேனி மாவட்ட அளவில் முன்மாதிரி கிராமமாக உள்ளது. மேலும், சின்னமனூரை சுற்றியுள்ள 13 கிராம ஊராட்சிகளிலும், அந்தந்த ஊராட்சி தலைவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கிராம சபைகளில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags : Bhoomipooja ,Pottipuram ,
× RELATED மதுரை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார்...