×

சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் வலியுறுத்தல் நீலகிரியில் மழை எதிரொலி: தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் மும்முரம்

ஊட்டி,ஏப்.25:நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன் மாதம் துவங்கி நவம்பர் வரை நீலகிரியில் தென்மேற்கு, வடகிழக்கு என இரு பருவமழை மழை கொட்டி தீர்க்கும். இது போன்ற சமயங்களில் தாழ்வான பகுதிகளில் விவசாயம் மேற்க்கொள்ள முடியாது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் என்பதால், விவசாயிகள் இது போன்ற பகுதிகளில் விவசாயம் மேற்க்கொள்வதை தவிர்த்து விடுகின்றனர்.

அதே சமயம் மலை பாங்கான பகுதிகள் மற்றும் சமமான பகுதிகளில் அதிகளவு விவசாயம் மேற்கொள்வார்கள். கடந்த டிசம்பருக்கு பிறகு மழை பெய்யாத நிலையில் உறைபனி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கிராமப்பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டது மட்டுமில்லாமல் விவசாய பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல் நீடித்தது. தேயிலை மகசூல் வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இதமான காலநிலை நிலவும் சூழலில், விவசாய பணிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன. ஊட்டி மற்றும் விவசாய பணிகள் மேற்கொள்ளும் கிராம பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக, தேயிலை மகசூலை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தேயிலை விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்த சமயத்தில் தேயிலை செடிகளுக்கு உரமிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். இதனால் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு வருகிறோம். அடுத்த மாதத்தில் நல்ல விளைச்சல் இருக்கும் என்றனர்.

Tags : Nilgiris ,
× RELATED வார விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்