உலக புத்தக தின கொண்டாட்டம் கல்லூரியில் பயிலரங்கம்

கோவை, ஏப்.25: டாக்டர் என்ஜிபி கல்வியியல் கல்லூரியில் காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம், சிட்டி கன்ஸ்யூமர் அசோசியேஷன் மற்றும் ஆல்பா அகாடமி சார்பாக ‘வகுப்பறை மேலாண்மை’ குறித்த பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதலாமாண்டு மாணவி ஜனனி வரவேற்றார். முதல்வர் ராமசாமி தலைமையில் சிட்டி கன்ஸ்யூமர் அசோசியேஷன் செயலாளர் திவாகர் வாழ்த்துரை வழங்கினார். ஆல்பா அகாடமி நிறுவனர் எலிசா வினோதினி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், காளப்பட்டி சிறகுகள் அரிமா சங்கம் சார்பாக முருகேசன், துறை தலைவர் பிரவீன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் முதலாமாண்டு மாணவி பிரியங்கா நன்றி கூறினார்.

Related Stories: