×

விளையாட்டு திடல் திறப்பு விருப்ப மனு வழங்கல் வேளாண் பல்கலை.,யில் கோடை கால நீச்சல் பயிற்சி

கோவை, ஏப்.25: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோடை கால நீச்சல் பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் ஜூன் 21-ம் தேதி வரை தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாணவிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 5 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்று பயிற்சி பெறலாம். இப்பயிற்சியில், பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக உடற்கல்வி துறையில் தங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவலுக்கு 94867-75495, 0422-6611279 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக மாணவர் நல முதன்மையர் ரகுசந்தர் தெரிவித்துள்ளார்.

Tags : University of Agriculture ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு