ஈரோடு தீயணைப்பு துறையில் நிலைய உதவி அலுவலர் 3 பேர் பதவி உயர்வுடன் இடமாற்றம்

ஈரோடு,  ஏப். 25: ஈரோடு மாவட்ட  தீயணைப்பு துறையில் தலைமை தீயணைப்பு நிலையமான ஈரோட்டில் உதவி நிலைய  அலுவராக (எஸ்எஸ்ஓ) பணியாற்றி வந்த லெமர் தம்பைய்யா, நிலைய அலுவலராக பதவி  உயர்வு வழங்கப்பட்டு, சென்னை ராஜ்பவன் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியிடம்  மாற்றம் செய்யப்பட்டார்.ஈரோடு தீயணைப்பு நிலைய உதவி அலுவலர்  பழனிசாமிக்கும், நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, ஈரோடு மாவட்டம்  ஆசனூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கொடுமுடி நிலைய உதவி அலுவலராக இருந்த ஜெயசந்திரனுக்கு பதவி உயர்வு  வழங்கப்பட்டு, திருப்பத்துார் மாவட்டம் நாட்ராம்பள்ளி தீயணைப்பு நிலைய  அலுவலராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவு தீயணைப்பு துறை  டிஜிபியால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: