×

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி செங்கல்பட்டு, காஞ்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: ஊரப்பாக்கத்தில் வரலட்சுமி மதுசூதன் எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துள்ள, ஊராட்சிகளில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கஜலட்சுமிசண்முகம், துணை தலைவர் சுமதிலோகநாதன், வண்டலூர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்திக், நெடுங்குன்றம் வனிதா  சீனிவாசன், துணை தலைவர் விஜயலட்சுமிசூர்யா, ஊனைமாஞ்சேரி மகேந்திரன், வேங்கடமங்கலம் கல்யாணிரவி, நல்லம்பாக்கம் லட்சுமணன், கீரப்பாக்கம் செல்வசுந்தரிராஜேந்திரன், குமிழி ராஜேஸ்வரிகோதண்டபாணி, கல்வாய் எல்லம்மாள்சிவகுமார், காயரம்பேடு ஜெயகாந்திபுஷ்பராஜ், துணை தலைவர் திருவாக்கு, பெருமாட்டுநல்லூர் பகவதிநாகராஜன், காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், துணை தலைவர் வினோதினிஞானசேகர், ஆதனூர் தமிழமுதன், மாடம்பாக்கம் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஊரப்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு கிராம சபை கூட்டத்தை நடத்தினார். அப்போது, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்கினார். இதில், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுப்புலட்சுமி, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடராகவன், சாய்கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திறகு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மல்லிகா மணி முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழுத்தலைவர் ஒரத்தி கண்ணன் கலந்து கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவராஜன், சசிகலா, மாவட்ட கவுன்சிலர் வசந்தா கோகுலகண்ணனா, ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்மலர் சிவகுமார், பார்த்தசாரதி, ஊராட்சி செயலர் வீரராகவன் உள்ளிட்ட பலர் இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

களத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் திலகம் செல்லப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் முத்துலட்சுமி வேல்முருகன் முன்னிலை வகித்தார்.
இதில், பற்றாளர் ஜார்ஜ், ஊராட்சி செயலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடமலைபுத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். இதே போல், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் கினார்  ஊராட்சியில் நேற்று தேசிய ஊரட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் தேவி அரசு தலைமையில் நடைபெற்றது.  
இதேபோன்று, மதுராந்தகம் ஒன்றியம் தேவாதூர்  ஊராட்சியில் நேற்று தேசிய ஊரட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது.   துணை தலைவர் கலைச்செல்வி ஆறுமுகம் திட்ட பணியாளர் சித்ரா ஊராட்சி செயலர் பழனி உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கள்ளபிரான்புரம் ஊராட்சி, வையாவூர் ஊராட்சியில் நேற்று தேசிய ஊரட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடை பெற்றது.

செய்யூர்: செய்யூர் வட்டம் அம்மனூர் கிராமத்தில் நடந்த  சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அவ்வூராட்சி மன்ற தலைவர் இளவரசி ஐனார்தனன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ஹரி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.  இந்த கிராம சபை கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

இதேபோன்று, செய்யூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் யோகாம்பிகை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒன்றிய தலைவர் சுபலட்சுமி பாபு,  ஒன்றிய துணைத் தலைவர் கிருஷ்ணவேணி தணிகாச்சலம் கலந்துகொண்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சியில் தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், நெம்மேலி தலைவர் ரமணி சீமான், வட நெம்மேலி தலைவர் பொன்னுரங்கம், திருவிடந்தை தலைவர் அமுதா குமார், மணமை தலைவர் செங்கேணி, வடகடம்பாடி தலைவர் பரசுராமன், காரணை தலைவர் ராதாகிருஷ்ணன், கடம்பாடி தலைவர் தேன்மொழி சுரேஷ்குமார், பையனூர் தலைவர் சுமித்ரா முத்துகுமார், எச்சூர் தலைவர் சரஸ்வதி சம்பத், குழிப்பாந்தண்டலம் தலைவர் சுகுணா சுதாகர் ஆகியோர் தலைமையில் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

வாரணவாசியில் சுந்தர் எம்எல்ஏ மரக்கன்றுகளை வழங்கினார்: வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் வாரணவாசி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா மோகனசுந்தரம் தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளாராக   க.சுந்தர் எம்எல்ஏ, கலந்துகொண்டு வாரணவாசி ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் தேவைகளை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள் கூறுகையில் வாரணவாசி, ஆம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களை சீரமைத்து தர வேண்டும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட தொள்ளாழி டி5 தடமென் அரசுப் பேருந்து மீண்டும் இயக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆம்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி தரவும் சமுதாயக்கூடம், வாரணவாசி பேருந்து நிழற்குடை உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தினர். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்தினராக கலந்து கண்ட க.சுந்தர் எம்எல்ஏ மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சேகர்,மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ் ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜ், சஞ்சய்காந்தி,உலகநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ்குமார், வாலாஜாபாத் திமுக பேரூர் செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Sengalpalatu, Kanji ,National Panchayat Raj Day ,Varalakshmi Madusuthu ,MLA ,
× RELATED காஷ்மீரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான...