பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

ஓட்டப்பிடாரம், ஏப்.25:தூத்துக்குடி யூனியன் கோரம்பள்ளம் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் தலைவர் செல்வபிரபா தலைமை வகித்தார்.  கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ கலந்துகொண்டு தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் முறையாக மக்களை சென்றடைவது குறித்தும் அதில் தகுதிவாய்ந்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் விளக்கினார். இதில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், கோரம்பள்ளம் ஊராட்சி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சண்முகையா எம்எல்ஏவுடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். அனைவரும் பஞ்சாயத்து ராஜ் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் முப்புலிவெட்டியில் தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது. இதில் துணைத்தலைவர் அரிகரன், செயலாளர் செல்வி, பற்றாளர்  அருள்ஜோதி, ஆவின் முத்துவேல், அரசின் கால்நடை, வேளாண்மை மற்றும்  வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி தலைவர் கமலாதேவி யோகராஜ் தலைமையில் யூனியன் தொடக்கப்பள்ளியில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தில் யூனியன் சேர்மன் ரமேஷ் பங்கேற்று பேசினார். இதில் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (பஞ்சாயத்து) பாண்டியராஜன், வட்டார குழந்தை திட்ட அலுவலர் காயத்ரி, ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி, சிலோன் காலனி, இந்திரா நகர் பகுதி மக்கள் பங்கேற்றனர்.

குளத்தூர்: விளாத்திகுளம் தொகுதி சூரங்குடியில் கிராமசபை கூட்டம்  தலைவர் வேல்த்தாய் ராமசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகுதியானவர்களுக்கு நலத்திட்டத்தையும் வழங்க உத்தரவிட்டார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், பாலஹரிஹரமோகன், ஊராட்சி துணைத்தலைவர் சதீஸ், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் மீனாட்சிசுந்தரம், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் மருதக்கனி சுப்பிரமணியன், செந்தூர் பாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், சூரங்குடி கூட்டுறவு தலைவர் சண்முகசுந்தரம், செயலர் ராமச்சந்திரன், பொறியாளரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், சமூகவலைதள பொறுப்பாளர் தர், மாணவரணி துணை அமைப்பாளர் கரண்குமார் பங்கேற்றனர்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் முதலூர் ஊராட்சி கிராமசபை கூட்டம் ஆலடிதட்டு கிராமத்தில் தலைவர் பொன்முருகேசன் தலைமையில் நடந்தது. யூனியன் கவுன்சிலர் மீனாமுருகேசன், ஒன்றிய கணக்கர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முருகேசன் தீர்மானங்கள் வாசித்து அனைவரையும் வரவேற்றார். இதில் விஏஓ பால்குமார், உதவியாளர் டேவிட், கூட்டுறவு கடன்சங்க எழுத்தர் குணசேகர் மற்றும் ஸ்டேன்லி, ஞானமுத்து, டேனியல், முத்துராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அரசூரில் கிராம சபை கூட்டம் தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேஷ்வரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டத்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அருணாதேவி தீர்மானங்கள் வாசித்தார். இதில் விஏஓ ஆனந்த், அரசூர் கூட்டுறவு கடன் சங்க செயலர் டென்னிசன், உதவி வேளாண்மைஅலுவலர் கற்பகம், ஊராட்சி உறுப்பினர் ராணி, செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

நடுவக்குறிச்சியில் தலைவர் சபிதா தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில் துணைத்தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ஆரோக்கியராஜ் தீர்மானங்கள் வாசித்தார். இதில் முன்னாள் யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் செல்வராஜ், திமுக செயலாளர் ஆல்டன், ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், கிளை செயலாளர் செல்வன், உதவி வேளாண்மை அலுவலர் கோபாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள் மணி, பேச்சியம்மாள், மேரி கலாவதி, சகாயவிஜயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிஷான் கார்டு வழங்க பதிவு செய்யப்பட்டது.

புதுக்குளம் கிராமசபை கூட்டம் தலைவர் பாலமேனன் தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் வரவேற்றார். பற்றாளர் முத்துபேச்சி, துணைத்தலைவர் முருகன், உறுப்பினர்கள் ஹெலன்பாப்பா, லட்சுமணன், ஆரணி, கலையரசி, சேர்மக்கனி, உதவி வேளாண்மை அலுவலர் மாரிபாண்டி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

 சாஸ்தாவிநல்லூரில் தலைவர் திருக்கல்யாணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் ஜஸ்டின் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜேஷ், கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி ஆகியோர் பேசினர். இதில் ஊராட்சி உறுப்பினர்கள் அன்னசெல்வி, ரோஸ்லீன், தேன்மலர், பரிமளா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.   

கூட்டங்களில் கிராமத்தில் குடிநீர், பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆறுமுகநேரி: மூலக்கரை ஊராட்சி கிராமசபை கூட்டம் தலைவர் பொன்செல்வி தலைமையில் நடந்தது. விஏஓ சண்முகபிரியா, ஆறுமுகநேரி வேளாண் கூட்டுறவு சங்க காசாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வேளாண் அலுவலர் உமாமகேஷ்வரி, ஊராட்சி செயலாளர் சாரதி, வார்டு உறுப்பினர்கள் பானுமதி, யோகேஷ்வரி, ஜெயா, கலிராஜ், பாலசுப்பிரமணியன், மகராசி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி பகுதியில் மாற்றுதிறனாளி  நலன் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது.

நாசரேத்:மூக்குப்பீறி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் கமலா தலைமையில் நடந்தது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட உதவியாளர் ராம்திலகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குடிநீர் தேவையை சரி செய்வது உள்ளிட்ட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஊராட்சி உறுப்பினர்கள் பாக்கியசீலி, அந்தோணி கிறிஸ்டி, பிச்சைகனி, கலைஅரசு, மகளிர் குழு பானுமதி, எல்சி, பணித்தள பொறுப்பாளர் சித்திரைசெல்வி, விஜயா, மூக்குப்பீறி திமுக கிளை செயலாளர் அருள், அல்பட், கனகராஜ், ஊராட்சி செயலாளர் வேதமாணிக்கம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்துங்கநல்லூர்:கருங்குளம் ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் சேக் அப்துல்காதர் தலைமையில் நடந்தது. வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் ராமலட்சுமி, துணைத் தலைவர் அப்துல்கனி, வார்டு உறுப்பினர்கள் இப்ராஹிம். கருங்குளம் ஒன்றிய தோட்டக்கலை மற்றும் விவசாயம் அலுவலக அதிகாரிகள், கிராம நிர்வாக உதவியாளர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மக்கள் நலச்சங்க தலைவர் சையத், ஊராட்சி உதவியாளர் ஹரிஹரசுந்தரம், முறப்பநாடு போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ஸ்பிக்நகர்: முள்ளக்காட்டில் கிராம சபை கூட்டம் தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் சரவணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடினார். கிராம மக்கள் தார் ரோடு, கழிவுநீர் வடிகால், ஆம்புலன்ஸ் சேவை, கஞ்சா விற்பதை கட்டுப்படுத்தவும், முக்கிய இடங்களில் கேமரா வசதி ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுத்தனர்.  பதிலளித்த கூடுதல் கலெக்டர் இப்பகுதியில் ஊரக ரோடு அமைக்கும் மாதிரி திட்டம் உள்ளது. அது வந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும். மற்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்றார்.  கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஒன்றிய மண்டல அலுவலர் ருக்மணி, விஏஒ பேச்சிராஜ் மற்றும் கிராமமக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் கிராமசபை கூட்டம் தலைவர் சொர்ணபிரியா தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், துணைத்தலைவர் கணேசன், கால்நடை மருத்துவர் பொன்ராஜ், பற்றாளர் ரோஸ்லின், வார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம் என்ற துரை, மீரா உம்மாள், முகம்மது அபுல்ஹசன், உதவி வேளாண் அலுவலர் லட்சுமி, அங்கன்வாடி பணியாளர்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் அப்துல்ரசாக் ரசூல்தீன் செய்துள்ளார்.

செம்மறிக்குளத்தில் நடந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம் தலைமை வகித்தார். விஏஓ திருமுகம், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர  செயான், சமூகநல விரிவாக்க அலுவலர் கிறிஸ்டிவிஜயராணி, உதவி வேளாண்மை அலுவலர் அஜய்குமார்,  வார்டு உறுப்பினர்கள் திருமணி, உமாமகேஸ்வரி மற்றும் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.செட்டியாபத்தில் நடந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி றwசெயலாளர் கணேசன் செய்திருந்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: