×

முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய கூட்டம்

முத்துப்பேட்டை, ஏப்.25: முத்துப்பேட்டையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கூட்டத்தில் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து விளக்கிப்பேசினார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கூட்டம் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முருகையன் எதிர்கால வேலையறிக்கையை முன் வைத்து பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் அம்புஜம் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். கூட்டத்தில், நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்த ஊதியம் ரூபாய் 281ஐ முழுமையாக வழங்கிட வேண்டும், வருகை பதிவு நேரத்தை காலை 7 மணி என்பதை காலை 9 மணி என நிர்ணயம் செய்ய வேண்டும், நூறுநாள் வேலை சம்பளத்தை நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், நூறுநாள் வேலை திட்டத்தில் குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நூறு நாட்கள் முழுமையாக வேலை வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உமேஷ்பாபு, மீனாம்பாள், விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் சிவசந்திரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Union of India ,Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...