உலக புத்தக தினவிழா

முத்துப்பேட்டை, ஏப்.25: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் இந்திரா மற்றும் ஆசிரியர்கள், வாசகர்கள் கலந்து கொண்டு பேசினர். நூலகருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்ட புத்தகங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் கிளை நூலக கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்ட அரசு நூலகத்தில் உலக புத்தக தின விழா மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமையில் நடைப்பெற்றது. டவுன் லயன்ஸ் கிளப் செயலாளர் சதாசிவம் , பொருளாளர் ரகுராமன், சின்னத்துரை, தமிழியக்க மாவட்ட செயலாளர் டாக்டர் மணிமாறன் முன்னிலை வகித்தனர். நூலக பணியாளர் கனகா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாண்புமிகு மாணவன் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நூலகர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலகர் சுஜாதா நன்றி கூறினார்.

Related Stories: