×

ஆத்திக்கோட்டை ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ேபச்சு

பட்டுக்கோட்டை, ஏப். 25: பட்டுக்கோட்டை அடுத்த ஆத்திக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அமராவதி நித்யானந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஆனந்தன் தீர்மானங்களை முன்மொழிந்தார். இதில் கலெக்டர்தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் எழுதிய வாழ்த்துக் கடிதத்தை ஊராட்சி மன்றத் தலைவருக்கு கலெக்டர்வழங்கினார்.கூட்டத்தில் ஆத்திக்கோட்டை ஊராட்சியில் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய இலக்குகளாக நீர்நிறைந்த கிராமம், சுத்தமான பசுமையான கிராமம், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராமம் ஆகிய 3 இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில்,கிராமத்தினை பசுமையாக, தூய்மையாக வைத்திருப்பதற்கும், கிராமத்தின் நீர் மேலாண்மை, குடிநீர் விநியோகம் சிறப்பாக செயல்படுவதற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஆத்திக்கோட்டை ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார். கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சியினை கலெக்டர், எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர். கூட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் முருகானந்தம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மோகன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் கணேஷ்வரன், வேளாண்மை உதவி இயக்குநர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)கோமதிதங்கம், துணை இயக்குநர் ஈஸ்வர் மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தலைமையில்தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags : Attikottai ,panchayat ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு