×

கந்தர்வகோட்டை அரசு நூலகத்தில் புத்தக தின விழா

கந்தர்வகோட்டை, ஏப்.25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு நூலகத்தில் உலக புத்தக தின விழா சனிக்கிழமை வாசகர்கள் மற்றும் நூலக உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொண்டாடினார். கந்தர்வகோட்டை அரசு நூலகத்தில் உலக புத்தக தின விழாவை முன்னிட்டு வாசகர்கள் நூலக உறுப்பினர்கள் கலந்து கொண்டு புத்தகம் படிப்பதின் நன்மைகள், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகத்தில் கழிக்க வேண்டும் என்றும் பல்வேறு நூல்கள், பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள், கண்டுபிடிப்புகள் கவிதைகள், கட்டுரைகள் ,அறிவியல்கள் கணித ,கோட்பாடுகள் என பல்வேறு புத்தகங்களை அர்ப்பணிப்புடன் வாசித்து படித்து அறிவை வளர்த்துக் கொள்ள நூலகமே தலை சிறந்த இடமாக விளங்குகிறது என்று பேசினார். மேலும் கந்தர்வகோட்டை நூலகத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளான டிஎன்பிஎஸ்சி, மருத்துவம்,பொறியியல் போன்ற தேர்வுக்கான குறிப்பேடு புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளது என நூலகர்கள் தெரிவித்தனர். உலக புத்தக தின விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் நூலகர்கள் ராமசாமி, வனிதா ஆகியோர் வரவேற்றனர். இதேபோல் அக்கட்சிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தக தின விழாவிற்கு அக்கட்சிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் முன்னிலையில் தட்சிணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புத்தக படிப்பின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

Tags : Book Day Festival ,Kandarwakottai Government Library ,
× RELATED நெமிலியில் உலக புத்தக தின விழா...