குன்னம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா

குன்னம்,ஏப்25: உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு குன்னம் கிளை நூலகத்தில் மாணவர்கள் பார்வைக்கு 26 ஆயிரத்து 473 புத்தகங்கள் ஒரே நேரத்தில் வைக்கப்பட்டது. குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மதியழகன் ரிப்பன் வெட்டி நூலகத்தின் புத்தகங்களைமாணவர்களுக்காக படிப்பதற்கு திறந்து வைத்தார் நிகழ்வில் குன்னம் தொடக்கப் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் 130 பெயரும் மற்றும் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 60 பேர் உட்பட குன்னம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கலாராணி மற்றும் உதவி ஆசிரியர்கள் குன்னம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியிலிருந்து முதுநிலை ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளி மாணவர்களை அவரவர் பள்ளியிலிருந்து அழைத்து வந்து பார்வையிட்டனர். மாணவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நூலகத்தில் புத்தகங்கள் எடுத்து பயன்பெறலாம் என்று நூலக ஊழியர் கற்பகம் தெரிவித்தார்.

Related Stories: