கொள்ளிடம் அரசு கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா

கொள்ளிடம், ஏப். 25: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மாவட்ட, மாநில மற்றும் இந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கி பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்விதுறை பேராசிரியர் முனைவர் பாலமுருகன், மனவள பயிற்றுனர் பாபுநேசன், அஞ்சல் ஊழியர் சாமிகணேசன், கண்ணையன் , மயிலாடுதுறை கபடி கழக செயலாளர் ஹென்ரி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவை முன்னிட்டு 50 இளைஞர்கள் கொண்ட சிலம்பாட்ட குழு சார்பில் சிலம்பாட்டம் நடைபெற்றது.

Related Stories: