கரூர் தெற்கு மாநகர திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

கரூர், ஏப். 25: கரூர் தெற்கு மாநகர திமுக சார்பில் உட்கட்சி தேர்தல் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தெற்கு மாநகர பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், தேர்தல் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளருமான மணிகண்டன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், மாவட்ட நிர்வாகிகள் மோகனசுப்பு உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தெற்கு நகர உட்கட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது குறித்து கலந்து கொண்ட அனைவரும் ஆலோசனைகளை வழங்கினர்.

Related Stories: