கரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழையால் சீதோஷ்ண நிலையில் மாற்றம்

கரூர், ஏப். 25: வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தின் இதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு லேசான சாரல் மழையும், அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. இந்த கோடை மழையின் காரணமாக கரூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு 8மணி முதல் 10மணி வரை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாக்கடை வடிகால்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து சென்றதோடு, சவுரிமுடித்தெரு, வெஙக்டேஷ்வரா நகர் போன்ற தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் உட்புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கரூர் 17மிமீ, அரவக்குறிச்சி 32மிமீ, அணைப்பாளையம் 46மிமீ, க.பரமத்தி 20மிமீ, குளித்தலை 1மிமீ, தோகைமலை 5.4மிமீ, கிருஷ்ணராயபுரம் 10மிமீ, மாயனூர் 27மிமீ, கடவூர் 38மிமீ, பாலவிடுதி 14.2மிமீ, மயிலம்பட்டி 2மிமீ என மாவட்டம் முழுதும் பஞ்சப்பட்டியை தவிர மற்ற இடங்களில் 212.60 மிமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதன் மொத்த சராசரி 17.72 ஆக உள்ளது.

Related Stories: