பண்ருட்டி அருகே இருதரப்பினர் மோதல் 15 பேர் மீது வழக்கு

பண்ருட்டி, ஏப். 25: பண்ருட்டி அருகே கொக்குப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது.  சம்பவத்தன்று மீண்டும் இதே பிரச்னையின் காரணமாக தகராறு எழுந்தது. இதில் இரு கோஷ்டியாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சக்திவேல், லோகநாயகி, பாவாடை, தனுசுராமன் மற்றும் முருகன், தனலட்சுமி ஆகியோரும், சுப்ரமணி தரப்பில் ராஜி, கருணா, சுப்ரமணி, கவிதா, ஹேமலதா, சுரேந்தர் ஆகியோரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகார்களின்பேரில், புதுப்பேட்டை போலீசார் இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: