×

சமத்துவபுரங்களில் குடியிருக்க சிறப்பு கிராம சபை கூட்டம்

வேப்பூர், ஏப். 25: நல்லூர் ஒன்றிய சமத்துவபுரங்களில் தங்குவதற்கு விண்ணப்பிக்க சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நல்லூர் ஒன்றியத்தில் ஐவதுகுடி மற்றும் தொளார் ஊராட்சிகளில் சமத்துவபுரங்கள் உள்ளது. இங்கு‌ கைவிடப்பட்ட வீடுகள், பயனாளிகளுக்கு வழங்கப்படாத வீடுகளுக்கு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய, கூடுதல் ஆட்சியர் தலைமையில், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், ஊராட்சி தலைவர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வு குழுவினர் சமத்துவபுரங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, பயனாளிகளின் தகுதிகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அதன்படி, வரும் 25ம் தேதி(இன்று) தொளார் ஊராட்சியில் காலை 10 மணிக்கும், ஐவதுகுடி ஊராட்சி சமத்துவபுரத்தில் பகல் 2 மணியளவிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.எனவே, சமத்துவபுரத்தில் நிரந்தரமாக தங்குவதற்கு விருப்பமுள்ளவர்கள், அரசு வீட்டு வசதி திட்டங்களில் பயனடையாதவர்கள், சிமெண்ட் கான்கிரீட் மற்றும் கூரை வீடு இல்லாதவர்கள், நிலமற்ற குடும்பங்கள், தேர்வுக் குழுவினரிடம் விண்ணப்பம் அளிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Tags : Samathuwapura ,
× RELATED சிங்கம்புணரி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு