ஆபாச படம் வெளியிடுவதாக கேரள சிறுமிகளுக்கு மிரட்டல்: போக்சோவில் மாணவன் கைது

ஆலந்தூர்: கேரள மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பரங்கிமலை மாங்காளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் மார்க் டிகுரூஸ் (19), கடந்த சில நாட்களுக்கு முன், அந்த சிறுமிகளின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் வெளியிடபோவதாக அவர்களை மிரட்டியுள்ளார். இதுபற்றி சிறுமிகளின் பெற்றோர் கேரள மாநில சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பேரில் பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, மார்க் டிகுரூஸை, போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்: திருமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ் 1 மாணவியை காதலித்து,  திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி திருப்பதிக்கு கடத்தி சென்று, அங்குள்ள லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்த திருமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் மீது ஆள் கடத்தல், போக்சோ உள்பட 3 பிரிவுகளில்  போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Related Stories: