திருப்புவனத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

சிவகங்கை, ஏப். 23: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, புத்தக வாசிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமை வகித்து பேசினார். ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, துணை தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் செல்வராஜ் வரவேற்றார். திருப்புவனம் பேரூராட்சி பகுதி மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதை தவிர்த்தல்- அதனால் ஏற்படும் சுகாதாரக்கேடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புத்தகம் வாசித்தல்- அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபடுவது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: