காரைக்குடியில் மக்கள் குறைதீர் கூட்டம்

காரைக்குடி, ஏப். 23: காரைக்குடியில் கண்ணதாசன் மண்டபத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாகாக எழுதி கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து அனைத்து மனுக்களும் உடனடியாக அந்தந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மொத்தம் 911 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில் 2 முதியோர் பென்சனுக்கான கோரிக்கை மனுவை ஏற்று கலெக்டர், உடனடியாக முதியோர் உதவித்தொகையை வழங்கினார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் 6 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், பள்ளத்தூர் பேரூராட்சி தலைவர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: