பள்ளத்தூர் பேரூராட்சி கூட்டம்

காரைக்குடி, ஏப். 23: காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சாந்தி தலைமை வகிக்க, செயல் அலுவலர் உமாமகேஸ்வரன் முன்னிலை வகித்தார். சொத்துவரி உயர்வு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் தலைவர் பேசுகையில், ‘15வது மத்திய நிதி ஆணையம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் பெறவும், பல்வேறு திட்டங்களுக்கு மானிய நிதி பெறுவதற்கு சொத்து வரி, காலிமனை வரி சீராய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு 4 பிரிவாக பிரித்து வரி உயர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. வரிஉயர்வு தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கப்படும். 5 வருடத்துக்கு ஒரு முறை வரி கூட்ட வேண்டும். அதுபோல செய்திருந்தால் தற்போது உயர்வு தெரிந்திருக்காது. பேரூராட்சியின் வருவாய் உயர்த்தவும், அடிப்படை வசதிகளை தொய்வின்றி செய்யவும் வரியை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது’ என்றார். இளநிலை உதவியாளர் மதியழகன் நன்றி கூறினார்.

Related Stories: