×

திருப்புல்லாணியில் முளைக்கொட்டு உற்சவம்

கீழக்கரை, ஏப். 23: திருப்புல்லாணி வயிரவன் கோயிலில் உள்ள கூனியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்சவ விழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் கூனியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன. இரவு நேரத்தில் கோயில் வளாகத்தில் கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் காலை கூனியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவில் பக்தர்கள் பால்காவடி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : Thirupullani ,
× RELATED பதநீர் சீசனால் கருப்பட்டி தயாரிப்பு பணி துவக்கம்