திண்டுக்கல் மாநகராட்சியில் அடிப்படை வசதி குறித்து மேயர் ஆய்வு

திண்டுக்கல், ஏப். 23: திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி குறித்து மேயர் இளமதி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, நகரில் 40வது வார்டு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக்கடை உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் ஓடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் 41வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது மேற்கு மண்டலத்தலைவர் பிலால் உசேன், 40வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹசினா காஜா மைதீன், பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ். அக்பர், வார்டு செயலாளர் சர்க்கரை மைதீன், வார்டு பிரதிநிதி இஸ்மாயில், இளைஞர் அணிச்செயலாளர் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: