உலக புவி நாளையொட்டி அறிவியல் கண்காட்சி

திருப்பூர், ஏப்.23: உலகப் புவி நாளையொட்டி திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் ‘ஸ்டீம் கார்னிவல் 2022’ என்ற பெயரில் அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஏ.வி.பி. அறக்கட்டளை பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் பிரமோதினி வரவேற்றார். திருப்பூர் அறிவியல் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் திருப்பூர் அறிவியல் மன்றத்தின் தலைவர் நசீரா அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இந்த கண்காட்சியில் மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் மின்னணுவியல், தாவரங்கள், வேதியியல், உலகம், பண்ணை வளர்ப்பு, பொறியியல், தகவல் தொடர்பு, வான்வெளி, கணிதம், கலை, கைத்தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்கள். மாணவர்களின் படைப்புகளை அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இந்த கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா, கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா ஆகியோர் தலைமையில் அனைத்து துறையை சேர்ந்த ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: