ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப். 23:ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தமிழக அரச செயலாக்க மறுக்க கோரி ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலம் முன்பு கையில் சங்கிலி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் ரவி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.ஆர்.நடராஜன், ஏஐடியுசி பாத்திர தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஏஐடியுசி கட்டிட சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாலர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Related Stories: