×

சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

ஊட்டி, ஏப்.23:  சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேசிய பசுமைப்படை சர்வதேச புவி தினம் காந்தல் முக்கோணம் திடக்கழிவு மேலாண்மை பகுதியில் அனுசரிக்கப்பட்டது. ஓம் பிரகாஷ் துவக்கப்பள்ளி மாணவர்கள் நேரடியாக நகராட்சி கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வினை பெற்றனர். ஊட்டி நகராட்சி நகர நல மருத்துவர் ஸ்ரீதர் தலைமை வகித்து பேசுகையில்,``ஆரோக்கியமான வாழ்விற்கு சுகாதாரம் அவசியம், அதை வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். மக்கும் மக்காத பொருட்களை பிரித்துக் கொடுப்பது மற்றும் நாம் வாழ அனைத்தையும் தரும் இயற்கையை பாதுகாப்பது நமது கடமை. மாணவர்கள் இந்த கருத்தினை அனைவரிடமும் கொண்டு செல்வது அவசியம்’’ என்றார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் வைரம் பேசுகையில்,``நீராதாரங்களில் குப்பைகளை வீசி எறிவதும் வனப்பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி செல்வது தவிர்க்க வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் மகாலட்சுமி, கற்பகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : International Earth Day ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்